புக்கிங்!

டாப் கியரில் போய்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இப்போதைக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் "பராசக்தி' படம், குட் நைட் டைரக்டர் விநாயக் சந்திரசேகரனுடன் ஒரு படம், வெங்கட் பிரபுவுடன் ஒரு படம், "டான்' இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் ஒரு படம் என தொடர்ந்து தனது லைனப்பை அமைத் துள்ளார். தற்போது புதிதாக தம்பதி இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி இணைந்துள்ளனர். "விக்ரம் வேதா' வெற்றிக்குப் பிறகு அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்தனர். பிறகு எந்த படமும் இயக்கவில்லை. "சுழல்' வெப் தொடர்களுக்கு கதை எழுதினர். "வதந்தி' வெப் தொடரை தயாரித்தனர். இப்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவுள்ளனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி.எஸ். இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. 

பூஜ்ஜிய ஆண்டு!

Advertisment

கார்த்தி நடிப்பில் இந்தாண்டு ஒரு படம்கூட இதுவரை வெளியாகவில்லை. தீபாவளி வெளியீடாக அறிவித்த "சர்தார் 2' சில காரணங்களால் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகிறதாம். இப்போது "டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘"மார்ஷல்'’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார்.  இப்போது தனது அடுத்த படத்திற்கான கதையைக் கேட்டுவருகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ‘"துடரும்'’ பட இயக்குநர் தருண் மூர்த்தி சொன்ன கதையைக் கேட்ட கார்த்தி, உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இப்படத்தை "மாமன்' படத் தயாரிப்பாளர் குமார், தயாரிக்கிறார். 

tt1

மீண்டும் கூட்டணி!

Advertisment

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘"தலைவன் தலைவி'’  குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலிலும் ரூ.50 கோடியை கடந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் விஜய்சேதுபதி -பாண்டிராஜ் கூட்டணி சேர்கிறது. முன்னதாகவே இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு பணிகள் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில்.. படத்தின் வெற்றி, பணிகளை இப்போதே தொடங்க வைத்துள்ளது. பாண்டிராஜ் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் தீவிரமாக இறங்கிவிட்டார். "தலைவன் தலைவி' போலவே இப்படத் தையும் குடும்ப கலாட்டாவாக கொடுக்க திட்டமிட்டி ருக்கிறாராம். படத்தின் நடிகர் நடிகை தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளவர், "குட்நைட்' மணி கண்டனை முதலாவ தாக கமிட் செய் துள்ளார். முக் கிய கதாபாத்தி ரத்தில் அவர் நடிக்கிறாராம். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

திரும்பும் வாய்ப்பு!

தெலுங்கில் சென்சேஷனல் நடிகையாக மாறியிருக்கிறார் இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். சொற்ப படங்களிலேயே நடித்துள்ள இவர், தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு முன்பு சென்சேஷனல் நடிகையாக மாறிய இளம் நடிகை ஸ்ரீலீலா, பல்வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் நடிக்க முடியாமல் போகும் பட வாய்ப்பு அப்படியே பாக்யஸ்ரீ போர்ஸுக்கு திரும்புகிறதாம். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் பாக்யஸ்ரீ, தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க விரும்புகிறார். சூர்யா -வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக இவரிடம் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதால், வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார். தமிழிலும் சென்சேஷனலாக வேண்டும் என்பது விருப்பமாம். இதற்கு முதல்படியாக  தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் துல்கர்சல்மான் படம் இருக்கும் என சொல் கிறார். இதில் அவர் நாயகியாக முக்கியத் துவம் வாய்ந்த கதா பாத்திரத்தில் நடித் துள்ளார். 

-கவிதாசன் ஜெ.